LATEST NEWS
“விதி விளையாடிய நொடி.. ரிக்ஷாவில் ஏறிய அடுத்த செகண்டில் வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி..” அசுர வேகத்தில் வந்த டிராக்டர் செய்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் சிர்கான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது அதிவேகமாக வந்த டிராக்டர் மோதியதில் இ-ரிக்ஷா நொறுங்கி, அந்த இளைஞரின் இரண்டு கால்களும் உடைந்த கொடூர விபத்து அரங்கேறியுள்ளது. அந்த இளைஞர் டாக்ஸிக்காகச் சாலையோரம் காத்திருந்தபோது, அங்கு வந்த பேட்டரி ரிக்ஷா ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த அடுத்த கணமே, பின்னால் இருந்து கட்டுப்பாடின்றி அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று, அந்த இ-ரிக்ஷா மீது மிகவும் பலமாக மோதியுள்ளது.
இந்தக் கொடூரமான மோதலின் தாக்கத்தால், அந்த இ-ரிக்ஷா தலைகீழாகக் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே சல்லிச் சல்லியாக உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இ-ரிக்ஷாவிற்குள் அமர்ந்திருந்த அந்த அப்பாவி இளைஞரின் இரண்டு கால்களும் கொடூரமாக நசுங்கி உடைந்தன. விபத்து நடந்த உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மீட்க முயன்ற நிலையில், இந்த விபத்து குறித்தான காட்சிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
