CRIME
“ஐயோ என் புருஷன் செத்துட்டான்” கணவனின் அந்த இடத்தில கரண்ட் ஷாக் கொடுத்து.. கள்ளகாதலனுக்காக கொலை செய்த கொடூரம்… நடித்து நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி…?
புது டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சிப் பின்னணி காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த 55 வயது கட்டுமானத் தொழிலாளியான முன்னா லால் என்பவர், கடந்த ஆகஸ்ட் 10 அன்று அதிகாலையில் அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வீட்டிலிருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. அவரது 45 வயது மனைவி மஞ்சுவிடம் விசாரித்தபோது, யாரோ மர்ம நபர்கள் மாடி வழியாக அத்துமீறி நுழைந்து இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
ஆனால், தடயவியல் சோதனையிலும் சிசிடிவி காட்சிகளிலும் மஞ்சுவின் பொய் அம்பலமானது. முன்னா லாலுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து, மரக்கட்டையால் தலையில் தாக்கியதோடு, அவரது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகக் கொன்றிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று அதிகாலையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் வந்து சென்றதும், தரையில் இருந்த இரத்தக் கறைகளை யாரோ அவசரமாகத் துடைத்து அழிக்க முயன்ற தடையங்களும் போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மஞ்சுவிற்குச் சாமன் என்ற 20 வயது இளைஞனுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கசப்பான திருமண வாழ்க்கை மற்றும் கணவன் தாராளமாகப் பணம் தராத கஞ்சத்தனம் காரணமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ மஞ்சு இந்த கொலையைத் திட்டமிட்டுள்ளார். இதற்காகச் சாமனுக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக மஞ்சு ஒப்புக்கொண்டு, கொலை முடிந்ததும் முன்பணமாக 20,000 ரூபாயும் கொடுத்துள்ளார். தற்போது மஞ்சு, அவரது கள்ளக்காதலன் சாமன் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கிஷன் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
