LATEST NEWS
“டெல்லியில் வெடித்த மாணவர் புரட்சி..! 30 ஆண்டு கால ரகசியத்தைச் சுட்டிக்காட்டி… கல்வி அமைச்சரை கதறவிடும் போராட்டக்காரர்கள்..!!”
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் இளைஞர்களும் மாணவர்களும் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கல்வியாளர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ளது. பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அடக்க முயன்றதில் சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
இச்சூழலில், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், தர்மேந்திர பிரதானின் கடந்த காலம் குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 1990-களில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தேசியச் செயலாளராக தர்மேந்திர பிரதான் இருந்தபோது, 1997-ல் ஒடிசாவில் நிலவிய வினாத்தாள் கசிவு புகார்களுக்கு எதிராக சுமார் 1,500 மாணவர்களைத் திரட்டி முதலமைச்சர் இல்லம் மற்றும் தலைமைச் செயலகம் நோக்கிப் போராட்டம் நடத்தினார். அப்போது அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கடுமையான தடியடியில் தர்மேந்திர பிரதானும் காயமடைந்திருந்தார்.
அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி காவல்துறையின் தடியடியைச் சந்தித்த அதே தர்மேந்திர பிரதான், இன்று நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பிலிருக்கும் போது, அதே போன்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்து வருவது பெரும் முரண்நகையாகப் பார்க்கப்படுகிறது.
