LATEST NEWS
BREAKING :காவிரி நீரை திறந்தது கர்நாடகா அரசு… சற்றுமுன் தமிழக மக்களுக்கு மக்களாட்சி செய்தி…!!
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணைகளில் இருந்து தமிழகத்திற்காகக் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே கர்நாடக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், இந்த நீர் திறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கருதப்படும் நிலையில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
