“அடடே..! காரை நிப்பாட்டச் சொல்லி குழந்தையைக் கூப்பிட்டு என்ன பண்ணிருக்காரு பாருங்க..! வைரலாகும் முதல்வர் விஜய்யின் கியூட் வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடடே..! காரை நிப்பாட்டச் சொல்லி குழந்தையைக் கூப்பிட்டு என்ன பண்ணிருக்காரு பாருங்க..! வைரலாகும் முதல்வர் விஜய்யின் கியூட் வீடியோ..!!”

Published

on

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே அவர் தனது பயணத் திட்டத்தின்படி காரில் சென்று கொண்டிருந்தார்.

முதலமைச்சர் விஜய் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வருகையை அறிந்த தாய் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையின் கையில் தேசியக் கொடியை ஏந்தச் செய்தபடி வழியோரத்தில் ஆவலுடன் காத்திருந்தார். இதனை காரில் இருந்து கவனித்த முதலமைச்சர் விஜய், உடனடியாகத் தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcBWLt0kpI2/?utm_source=ig_web_button_share_sheet

வாகனத்தை நிறுத்தியதும், வழியோரத்தில் கையில் தேசியக் கொடியுடன் காத்திருந்த அந்தப் பச்சிளம் குழந்தையைத் தன் அருகில் அழைத்து அன்போடு கொஞ்சி மகிழ்ந்து மகிழ்வித்தார். முதலமைச்சரின் இந்த நெகிழ்ச்சியான மற்றும் அன்பான செயலைக் காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in