“வயசு 70+ ஆகிடுச்சு கிளம்புங்க” அனிதா உட்பட 13 பெரிய தலைகளின் பதவி காலி… பதவியை பறிக்க துடிக்கும் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வயசு 70+ ஆகிடுச்சு கிளம்புங்க” அனிதா உட்பட 13 பெரிய தலைகளின் பதவி காலி… பதவியை பறிக்க துடிக்கும் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் பரபரப்பு…!!

Published

on

திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி நிர்வாக ரீதியாகப் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதே வேளையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். பதவி பறிக்கப்படும் இந்த மூத்த நிர்வாகிகளுக்குக் கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் அல்லது தலைமை நிலையச் செயலாளர் போன்ற பிற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வயது வரம்பு அடிப்படையிலான அதிரடிப் பட்டியலில் எ.வ.வேலு, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட 13 முக்கிய மூத்த மா.செ.க்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றும் நோக்கில் இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in