LATEST NEWS
BREAKING: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ரூ.23,000 சிறப்பு நிதி – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!
சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறப்பு நிதி இனி 23,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த நிதியுதவி உயர்வு உடனடியாகச் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற புதிய முன்னோடித் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் துவங்கப்படும் என்று அவர் கூறினார். இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
