கூட்டணியில் இருந்து உடனே வெளியேறுவோம்… எங்களை வைத்து திமுகவை உடைக்க சதி… திடீர் புயலை கிளப்பிய திருமாவளவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூட்டணியில் இருந்து உடனே வெளியேறுவோம்… எங்களை வைத்து திமுகவை உடைக்க சதி… திடீர் புயலை கிளப்பிய திருமாவளவன்..!!

Published

on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்தத் தேர்தல் முடிவுகளால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமைந்தது. அந்த இக்கட்டான காலகட்டத்தில், தங்களை முன்னிறுத்தி திமுக தலைமையிலான முந்தைய கூட்டணியைச் சிதறடிக்கப் பல்வேறு அரசியல் சக்திகள் பின்னணியில் சதி வேலைகளைப் பார்த்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தற்பொழுது ரகசியத்தை உடைத்துப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தவிர்க்கவே தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு கொள்கைகளுக்காக விசிகவின் வன்னி அரசு தற்காலிகமாக அமைச்சரவையில் சேர்ந்துள்ளார்; கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனே வெளியேறவும் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

முதல்வர் விஜய்யின் அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ல் சென்னையில் நடக்கவுள்ளது. இதற்காக விசிகவினருக்கு தவெக அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் தவெக தலைமையில் ‘சமூக நீதி முற்போக்குக் கூட்டணி’ அமைப்பது மற்றும் பெயர் குறித்து இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in