முத்துக்காளையின் கண்ணீர் வீடியோ…!”CM விஜய் அண்ணா என் மனைவியைக் காப்பாத்துங்க..” – உருகிய முத்துக்காளை…!சிகிச்சை பலனின்றி முத்துக்காளை மனைவி மாலதி காலமானார்…! – cinefeeds
Connect with us

CINEMA

முத்துக்காளையின் கண்ணீர் வீடியோ…!”CM விஜய் அண்ணா என் மனைவியைக் காப்பாத்துங்க..” – உருகிய முத்துக்காளை…!சிகிச்சை பலனின்றி முத்துக்காளை மனைவி மாலதி காலமானார்…!

Published

on

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் முத்துக்காளை. எத்தனையோ மேடைகளிலும் திரைப்படங்களிலும் மக்களைத் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்த அவர், தற்போது மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது மனைவி மாலதி (47) கடந்த 19 நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலதிக்குத் தலையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் கடந்த 19 நாட்களாக முத்துக்காளை போராடி வந்தார். சமீபத்தில், தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காகப் பண உதவி கோரி அவர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ, சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழச் செய்தது.

Advertisement

முத்துக்காளையின் இந்த உருக்கமான கோரிக்கை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அரசுத் தரப்பிலிருந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று, மாலதிக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளைத் துரிதமாக வழங்க மருத்துவர்களிடம் உத்தரவிட்டிருந்தார். சில அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களும் முத்துக்காளைக்கு உதவிக்கரம் நீட்டியிருந்தனர். இருப்பினும், மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காமல் மாலதி இன்று காலை காலமானார்.

இந்த சோகமான செய்தியைத் தொடர்ந்து, மாலதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்காளையின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கம்பட்டி திருக்கோதையாபுரம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று இரவு அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மனைவியை இழந்து வாடும் நடிகர் முத்துக்காளைக்குத் திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in