நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!கள்ளக்காதலனுடன் உல்லாசம்…!கண்ணெதிரே நடந்த துரோகம்…! கள்ளக்காதலனை சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று தீர்த்துக்கட்டிய கணவன்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!கள்ளக்காதலனுடன் உல்லாசம்…!கண்ணெதிரே நடந்த துரோகம்…! கள்ளக்காதலனை சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று தீர்த்துக்கட்டிய கணவன்…!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில், கடந்த மே 22-ஆம் தேதி பாலசுப்பிரமணி (48) என்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் தலைமையிலான தனிப்படை போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இக்கொலை வழக்கு தொடர்பாக கன்னிவாடி ரெட்டியார்பட்டி காலனியைச் சேர்ந்த காசிராஜா (42), அவரது மகன்கள் சஞ்சய் (20), மனோஜ்குமார் (21) மற்றும் இவர்களின் உறவினரான வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜானகிராமன் (25) ஆகிய 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணையில், காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும், கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவு இருந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

சம்பவத்தன்று நள்ளிரவில் காசிராஜா தாகத்திற்காக தண்ணீர் குடிக்க எழுந்தபோது, வீட்டில் மனைவி மருதாயம்மாள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது மகன்களுடன் சேர்ந்து மனைவியைத் தேடிச் சென்றபோது, பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தனர். உடனே தனது உறவினர் ஜானகிராமனை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றவே, ஜானகிராமன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் பாலசுப்பிரமணியத்தைத் தாக்கியுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியமும் எதிர்த்தாக்குதல் நடத்தவே, ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற நால்வரும் சேர்ந்து அங்கிருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) தூக்கி பாலசுப்பிரமணியத்தின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் கொலையுறுதியானதும், சாட்சியங்களை மறைப்பதற்காக அந்த சர்வே கல்லை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். தற்போது குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த பயங்கர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in