சட்டம் என்ன சொன்னாலும் கவலையில்லை…ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல வச்சுக்கிறேன்…கணவரைக் காணோம் எனப் புகார் கொடுத்த முதல் மனைவி.. போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சட்டம் என்ன சொன்னாலும் கவலையில்லை…ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல வச்சுக்கிறேன்…கணவரைக் காணோம் எனப் புகார் கொடுத்த முதல் மனைவி.. போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Published

on

அன்பும் சகிப்புத்தன்மையும் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகளுக்குள், சில நேரங்களில் புகுந்துவிடும் பேராசையும் தவறான புரிதல்களும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. வெல்டிங் தொழில் செய்து வரும் 28 வயதான சடையாண்டி என்பவருக்கு, சுமதி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சுமூகமாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில், கடந்த சில மாதங்களாக சடையாண்டி ரகசியமாக செல்போனில் பேசி வந்ததால் சந்தேகம் முளைத்துள்ளது. இதுகுறித்து மனைவி கேள்வி கேட்க, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையாண்டி திடீரென மாயமாகியுள்ளார். கணவரைக் காணாமல் பதறிப்போன சுமதி, வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் சடையாண்டியின் செல்போன் சிக்னலை வைத்துத் தேடியபோதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. சடையாண்டி எங்கும் கடத்தப்படவோ அல்லது மாயமாகவோ இல்லை; மாறாக, புத்தூர் பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நாகேஷ்வரி என்ற பெண்ணிடம் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, அவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விபரங்களைச் சேகரித்த போலீசார், சடையாண்டி, அவரது முதல் மனைவி சுமதி மற்றும் இரண்டாவது மனைவி நாகேஷ்வரி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான் காவல் நிலைய வளாகமே ஸ்தம்பசிக்கும் வகையிலான விவாதங்கள் அரங்கேறின.

Advertisement

காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்தின் போது, “முதல் மனைவி எப்போதும் சண்டை போடுவதால் மனநிம்மதி தேடி இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன்; சட்டம் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து நான் நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்” என்று சடையாண்டி கூலாகக் கூற, போலீசாரே திகைத்துப் போயினர். அதேநேரம், ஏமாற்றப்பட்டதை அறிந்தும் சடையாண்டியுடன்தான் வாழ்வேன் என்று நாகேஷ்வரியும், தனது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகக் கணவர் தனக்கு மட்டும்தான் வேண்டும் என்று சுமதியும் பிடிவாதம் பிடித்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட போலீசார், முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் சடையாண்டியைச் சட்ட ரீதியாக எச்சரித்தனர். இறுதியாக, இரண்டாவது பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த போலீசார், சடையாண்டிக்கு உரிய அறிவுரைகளைக் கூறி, அவரை முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in