“ஐயோ… என்ன கொடுமை இது?!”.. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்… உலகையே உறைந்துபோக வைத்த உண்மை..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ… என்ன கொடுமை இது?!”.. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்… உலகையே உறைந்துபோக வைத்த உண்மை..!!!

Published

on

மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும், நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம் ‘சிறுநீரகப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு சோகமான கதை உள்ளது. கடும் வறுமை மற்றும் கடன் சுமை காரணமாக இக்கிராமத்தில் உள்ள பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்றுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட தரகர்கள், முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகம் மீண்டும் வளரும் என்று பொய் கூறி, அப்பாவிகளை ஏமாற்றி மிகக் குறைந்த விலைக்கு அதாவது ரூ. 20,000 முதல் 70,000 வரை உறுப்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான மருத்துவ அறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததே கிராம மக்கள் ஏமாற முக்கியக் காரணமாக அமைந்தது. சிறுநீரக விற்பனை அவர்களுக்கு உடனடிப் பணத்தேவையைப் பூர்த்தி செய்தாலும், சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு இழப்பு காரணமாக அவர்கள் கடுமையான உடல்நலக் குறைபாடுகள், மருத்துவ சிக்கல்கள் மற்றும் உளவியல் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் உறுப்பு கடத்தல் கும்பல்களின் கொடூர முகத்தையும், கிராமப்புறங்களில் நிலவும் அறியாமையின் விபரீதத்தையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in