LATEST NEWS
“அடேங்கப்பா… சமையல் பண்றதுல இருந்து கூட்டிப் பெருக்குறது வரைக்கும்… எல்லாமே ரோபோதான்…! அம்மாவுக்காகக் கெத்து காட்டிய கேரளப் பையன்..!!”
கேரளாவைச் சேர்ந்த லெவின் பால்லோஸ் என்ற இளைஞர், வீட்டின் பழைய கபாத்துகள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி தாய் செய்யும் வீட்டு வேலைகளை எளிதாக்க ரோபோக்கள் மற்றும் தானியங்கி சாதனங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். எந்தவிதமான விலையுயர்ந்த தொழில்நுட்பமும் இல்லாமல், தனது சொந்த புத்தாக்க அறிவால் இவர் உருவாக்கிய இந்த சாதனங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கார்போர்டு, பழைய ஒயர்கள், கயிறுகள், நட்-போல்ட்டுகள், சிறிய மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற எளிமையான கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தியே இவர் இவற்றை உருவாக்கியுள்ளார். சமையலின் போது கடாயில் உணவைத் தானாகவே கிண்டிவிடும் ரோபோடிக் சாதனம், மோட்டார் மூலம் தானாகத் திறந்து மூடும் திரைச்சீலைகள், தரை சுத்தப்படுத்தும் கருவி, தண்ணீர் எடுத்து வரும் ரோபோ, பேட்டரியில் இயங்கும் ரொட்டி தயாரிக்கும் சாதனம் மற்றும் ஃபேன் ஆன் செய்யும் மினி சாதனம் போன்ற பல பயனுள்ள கருவிகளை இவர் வடிவமைத்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbN-rA6zq63/?utm_source=ig_web_button_share_sheet
லெவின் பால்லோஸின் இந்த அபார திறமையை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இவரது இந்த கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்த கேரள மாநிலத் தலைவர்கள் இவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்துள்ளனர். சரியான வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைத்தால், இந்த இளைஞர் எதிர்காலத்தில் இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
