அடக்கொடுமையே..! 5 சிங்கங்களை அலறவிட்ட எருமைக்கூட்டம்… தலைதெறிக்க ஓடிய ‘காட்டு ராஜாக்கள்’..! குஜராத்தில் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே..! 5 சிங்கங்களை அலறவிட்ட எருமைக்கூட்டம்… தலைதெறிக்க ஓடிய ‘காட்டு ராஜாக்கள்’..! குஜராத்தில் வைரல் வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கம்பா தாலுகா, இங்கோராலா கிராமத்திற்கு அருகே கிர் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. இரையைத் தேடி வந்த 5 சிங்கங்கள் எருமைக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால், எருமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிங்கங்களை ஆக்ரோஷமாக எதிர்த்துத் துரத்தத் தொடங்கியதால், நிலைமையைத் உணர்ந்த சிங்கங்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காட்டுக்குள் பயந்து ஓட்டம் பிடித்தன.

இந்த வியத்தகு சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். எருமை மாடுகளின் ஒற்றுமையைக் கண்டு பயந்து ஓடும் சிங்கங்களின் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது. வேட்டையாட வந்த சிங்கங்களையே இரையாக வேண்டிய விலங்குகள் திரண்டு விரட்டியடித்த இந்த காட்சி காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இருப்பினும், இந்தத் தொடக்க மோதலுக்குப் பிறகு சிங்கங்கள் மீண்டும் முயன்று இறுதியில் ஒரு எருமையை வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் மனிதர்கள் எவருக்கும் காயமில்லை என்றாலும், குடியிருப்புப் பகுதிகளின் அருகே சிங்கங்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வனத்துறை அதிகாரிகள் நிலைமையைக் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in