LATEST NEWS
ஐயோ கொடுமையே…! திருமணமான 20 நாட்களில் சந்தேகம்… புதுமாப்பிள்ளை எடுத்த கொடூர முடிவு…! உயிருக்குப் போராடும் மனைவி… ஏட்டாவா சோகத்தின் பின்னணி என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா பகுதியில், திருமணமாகி 20 நாட்களேயான புதுமணத் தம்பதியிடையே ஏற்பட்ட சந்தேக தகராறால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஏட்டாவா ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட ஜுக்ராமாவ் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான அங்கித் குஷ்வாஹாவுக்கும், குஷ்பூ என்பவருக்கும் கடந்த ஜூலை 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அங்கித்தும் குஷ்பூவும் துணிக் கடைக்குச் சென்றபோது, ஒரு நபர் குஷ்பூவின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். ஆனால், தனது மனைவி வேறொரு நபருடன் செல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்ட அங்கித், வீதியிலேயே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்தேகத்தினால் ஏற்பட்ட தகராறு திங்கள்கிழமை காலையிலும் தொடரவே, மனவேதனையடைந்த அங்கித் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கணவரின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி குஷ்பூ, தூக்க மாத்திரைகளை உட்கொண்டதுடன் சேலையால் தூக்கிட முயன்று தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு பதறிய குடும்பத்தினர் அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சியால் மனைவியின் பாட்டிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்கித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
