LATEST NEWS
காதலுக்காக ரூ.3,000 கோடி..! இறப்பதற்கு முன் கோடீஸ்வரர் செய்த பேரதிர்ச்சி காரியம்… யார் அந்த அதிர்ஷ்டசாலி இளம்பெண்?.. வெளிவந்த பகீர் பின்னணி..!!
ஏராளமான இளம்பெண்களைச் சீரழித்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு முன் தன் காதலியான காருண்யா ஷுலியாக் என்பவருக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்து மற்றும் 33 காரட் வைர மோதிரத்தை உயில் எழுதி வைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த காருண்யா 2010-ல் அமெரிக்கா வந்தபோது, 58 வயதான எப்ஸ்டீனின் நட்பைப் பெற்றுள்ளார். பின்னர் எப்ஸ்டீனின் வழிகாட்டுதலின்படி போலியாக ஒரு பாலினத் திருமணம் செய்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவர், எப்ஸ்டீனின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் சொத்துக்களை முழுமையாகக் கவனித்து வந்துள்ளார்.
2019-ல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிலையில், உயிரிழப்பதற்கு முந்தைய நாள் காருண்யாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. எப்ஸ்டீனின் மொத்த சொத்து மதிப்பு 600 மில்லியன் டொலர்களாக இருந்தபோதிலும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கியது போகத் தற்போது 120 முதல் 200 மில்லியன் டொலர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தொகையான 100 மில்லியன் டொலர்களும் காருண்யாவுக்குச் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
