LATEST NEWS
BREAKING: ரூ.20000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்வு.. தமிழக அரசு அறிவித்தது..!!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் பண்பாட்டுத் துறை கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, அவர்களது மாதாந்திர ஊதியத்தை ₹20,000-ல் இருந்து ₹25,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஊதிய உயர்வு அரசு நடத்தும் இசை மற்றும் கவின்கலைக் கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்ந்து கலைத் துறையினருக்கான பல்வேறு முக்கிய நலத்திட்டங்களையும் அமைச்சர் ராஜ்மோகன் அவையில் அறிவித்தார். நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான இசைக் கருவிகள் மற்றும் ஆடைகளை வாங்குவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ₹10,000-ல் இருந்து ₹20,000 ஆக இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ₹3,000 உதவித்தொகைத் திட்டம், நடப்பு ஆண்டு முதல் கூடுதலாக 1,500 கலைஞர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
