அப்படிப்போடு..! ரூ.2,500 மகளிர் தொகை உயர்வு.. வெளியான சூப்பர் குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்படிப்போடு..! ரூ.2,500 மகளிர் தொகை உயர்வு.. வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Published

on

தமிழகத்தில் முதல்வர் விஜய்தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்தத் தொடரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தனி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி மக்கள் நலத்திட்டங்கள் இதில் இடம்பெறும் என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, மகளிருக்கான உரிமைத் தொகையை தற்போதுள்ள ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துடன், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு முழுமையான இலவசப் பயணத் திட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகப் பெண்கள் மாநில எல்லைகளைக் கடந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளிலும் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in