பகீர்..! SBI வங்கி மேலாளருக்கு ‘பளார்.. வங்கியிலேயே வைத்து கன்னத்தில் அறைந்த அழகிரி மகள்.. நடந்தது என்ன..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

பகீர்..! SBI வங்கி மேலாளருக்கு ‘பளார்.. வங்கியிலேயே வைத்து கன்னத்தில் அறைந்த அழகிரி மகள்.. நடந்தது என்ன..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த எஸ்பிஐ வங்கி கிளை இயங்கி வருகிறது. அங்குள்ள லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேசுவதற்காக வங்கி மேலாளர் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அறைந்ததால் பரபரப்பு

அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்

லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்த… pic.twitter.com/v5glgsgRKX— Polimer News (@polimernews) July 25, 2026

இந்த வாக்குவாதத்தின் போது கயல்விழி கோபமாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், வங்கி மேலாளர் தனது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரின் கன்னத்தில் திடீரென அறைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in