LATEST NEWS
போடு ரகிட ரகிட..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உறுதியானது.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி..!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், பொதுமக்களிடையே தவெகவுக்கு அமோக ஆதரவு கிடைக்கும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, விடுபட்ட தகுதியான பெண்களுக்குப் புதிய விண்ணப்பங்களைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கி, புதிய பயனாளிகளைச் சேர்க்கவும் தவெக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
