LATEST NEWS
காலையிலேயே குட் நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை.. CM விஜய் மகிழ்ச்சி செய்தி..!!
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதலமைச்சர் விஜய் எதிர்பாராத நேரத்தில் உயர்த்தியதைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையையும் உயர்த்தி அவர் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என தவெக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முந்தைய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அதிரடி அறிவிப்பானது மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த எதிர்பார்ப்பிற்கு தற்போது மேலும் வலு சேர்த்துள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உயர்வு நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த இலக்காக பெண்களின் வாக்கு வங்கியைக் கவர அரசு திட்டமிட்டுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் இந்த மகளிர் உரிமைத் தொகையை கணிசமாக உயர்த்துவதன் மூலம், தவெக அரசு தனது மக்கள் செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும் என அக்கட்சியின் முக்கிய தலைகள் நம்புகின்றனர்.
