LATEST NEWS
அந்தம்மாவோட எந்தத் தொடர்பும் வச்சிக்காதீங்கன்னு விஜய் சார் சொன்னாரு… ஆனா சுதந்திர தின விழாவில அப்பா பக்கத்துலேயே திரிஷாவுக்கு சீட் போட சொல்லிருக்காரே.. கடும் அப்செட்டில் தவெக தலைகள்..!!
சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விவகாரம், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷிடம், ‘அந்தம்மாவோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று விஜய் ஏற்கனவே சொல்லிவிட்டார்’ என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிவந்த நிலையில், இந்த புதிய நகர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் கட்சியின் முடிவை விட விஜய்யின் தனிப்பட்ட விருப்பமே மேலோங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது, ‘தன்னுடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பக்கத்திலேயே த்ரிஷாவிற்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று விஜய்யே நேரடியாகத் தெரிவித்துவிட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜய்யின் இந்த நேரடி உத்தரவின் காரணமாகவே த்ரிஷாவிற்கு விழாவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்த திடீர் முடிவால் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தலைகள் கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சியின் ஒழுக்கம் மற்றும் அரசியல் பொதுவெளிப் பிம்பம் குறித்து தவெக நிர்வாகிகள் கவலைப்படும் வேளையில், த்ரிஷா தொடர்பான விஜய்யின் இந்த அணுகுமுறை அக்கட்சியின் உள்வட்டாரத்தில் தற்போது தர்மசங்கடத்தையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
