LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! தவெகவில் இணையும் நடிகர் சரத்குமார்..? பின்னணியில் ராதிகா செய்த மாஸ் ஸ்கெட்ச்..!!
தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நடிகர் சரத்குமார், பாஜகவில் தனக்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் வழங்கப்படாததால் தீவிர அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தனது கட்சியைப் பாஜகவுடன் இணைத்த அவருக்கு, தேசிய அளவில் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவடைந்து நீண்ட நாட்களாகியும் பாஜகவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மறுசீரமைப்புகளில் அவருக்கு எந்தவிதத் தேசிய பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை.
சமீபத்தில் வெளியான பாஜகவின் புதிய தேசியப் பொறுப்பாளர்கள் பட்டியலிலும் சரத்குமாரின் பெயர் விடுக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்போ அல்லது கட்சி அமைப்பில் செல்வாக்குமிக்கப் பொறுப்புகளோ அவருக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது எதிர்கால அரசியல் பயணத்தை எந்தப் பாதையில் கொண்டு செல்வது என்பது குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ‘நாட்டாமை குடும்பம்’ என்ற அடையாளத்தின் கீழ் மீண்டும் ரசிகர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் தொடங்கியுள்ளார்.
பாஜகவில் தகுந்த மரியாதை கிடைக்காத பட்சத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது குறித்தும் சரத்குமார் பரிசீலித்து வருவதாக அரசியல் களத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை ராதிகாவிற்கும் விஜய்க்கும் இடையே உள்ள நீண்டகால நல்ல நட்பும் இந்த நகர்வுக்குச் சாதகமான அம்சமாகக் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தவெகவில் இணையும் திட்டம் தடையானால், மீண்டும் தனது சமத்துவ மக்கள் கட்சியை மறுசீரமைத்துத் தனியாகச் செயல்படும் எண்ணத்திலும் அவர் இருப்பதாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தனது இறுதி அரசியல் முடிவை அவர் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை சமாதானப்படுத்தி பாஜகவிலேயே தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளிலும் அக்கட்சியின் மேலிடம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
