LATEST NEWS
“என்னை யாரும் பிடிக்க முடியாதுடா..!” உரிமையாளருடன் தகராறு… போலிஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு JCB-யில் தப்பி ஓடிய டிரைவர்..! 4 காவல் நிலையங்கள் இணைந்து நடத்திய சினிமா பாணி சேஸிங்..!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, உரிமையாளர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரைத் தேடத் தொடங்கிய நிலையில், ஓட்டுநர் அந்த ஜேசிபி வாகனத்தைக் கடத்தித் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்க காலிகோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு காவல் நிலையங்களைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தப்பிச் சென்ற ஜேசிபி வாகனத்தை வழிமறிக்க போலீசார் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கி, வழியில் அமைக்கப்பட்டிருந்த போலிஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்ப முயன்றார். போலிஸ் வாகனங்கள் ஜேசிபியைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன. பல கிலோமீட்டர் தூரம் நீடித்த இந்த பரபரப்பான போலீஸ் சேஸிங், ஒடிசாவின் முக்கிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்தது.
https://www.instagram.com/reel/DcIhiDdISYh/?utm_source=ig_web_button_share_sheet
இறுதியில், கபிசூர்யநகர் காவல் எல்லைக்குட்பட்ட குடியாலி என்ற இடத்திற்கு அருகில் ஜேசிபி வாகனத்தை ஒரு வயல்வெளியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜேசிபி வாகனத்தைக் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதிவேக துரத்தலின் போது போலிஸ் தடுப்புகளை உடைத்தது உட்பட கூடுதல் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
