நான் சென்னை வர்றதுக்குள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. கோவில்பட்டி கூட்டத்தில் நடந்தது என்ன..? ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் சென்னை வர்றதுக்குள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. கோவில்பட்டி கூட்டத்தில் நடந்தது என்ன..? ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு..!!

Published

on

திமுகவிற்கு இடையில் வருபவர்கள், இடையிலேயே போய்விடுவார்கள் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துப் பேசியுள்ளார். மேலும், தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தான் மட்டுமே முன்னின்று பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசும் கூட்டங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சர்ச்சையாகி விடுகிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், “நான் எங்கு பேசினாலும் வில்லங்கம் ஆகிவிடுகிறது” என்று கூறினார். இதற்கு உதாரணமாகப் புதுக்கோட்டையில் தான் பேசிய மறுநாளே தன் மீது வழக்குத் தொடரப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

அதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, தான் சென்னைக்கு வந்து சேருவதற்குள், அங்கு பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த அவசரக் கைது நடவடிக்கை மூலம் தற்போதைய அரசுக்குச் சகிப்புத்தன்மை இல்லை என்பது வெளிப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in