காலையிலேயே ஹேப்பி நியூஸ்..! இவர்களுக்கு தினசரி ₹50 உணவுப்படி.. தமிழக அரசு அறிவித்தது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஹேப்பி நியூஸ்..! இவர்களுக்கு தினசரி ₹50 உணவுப்படி.. தமிழக அரசு அறிவித்தது..!!

Published

on

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படாதது மற்றும் உணவுப் பாத்திரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாதது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்காகக் கோரப்பட்டிருந்த 3 ஆண்டு கால டெண்டரையும் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால், அம்மா உணவகங்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் நடைமுறை இனி முழுமையாக நிறுத்தப்படுகிறது.

இதற்கு மாற்றாக, தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு ₹50 உணவுப்படி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த உணவுப்படியை நேரடியாக வழங்குவதற்காகச் சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து ₹44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்பதால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தங்களின் விருப்பப்படி வாங்கி உன்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in