LATEST NEWS
“போராடக் கூடாது, சம்பள உயர்வு கேட்கக் கூடாது” தூய்மை பணியாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கிய தனியார் நிறுவனம்.. புதிய சர்ச்சை..!!
சேலம் ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் தனியார் நிறுவனம் ஒன்று புதிய சர்ச்சை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து வாங்கியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், ஊதிய உயர்வு, விடுப்பு, பி.எஃப் உள்ளிட்ட உரிமைகளைக் கேட்க மாட்டேன் என்றும், எந்தப் போராட்டத்திலும் ஈடுபட மாட்டேன் என்றும் பணியாளர்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறையிலேயே இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கடந்த காலங்களில் தி.மு.க ஆட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக நின்ற முதலமைச்சர் விஜய், தற்போதைய இந்தச் சர்ச்சைக்கு உடனடியாகத் தலையிட்டு உரிய முடிவு கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
