LATEST NEWS
அடேங்கப்பா.. இதனால்தான் வரலையா?.. கையெழுத்துப் போட வராத செந்தில் பாலாஜி.. பின்னணியில் இருக்கும் காரணம்.. வெளியான தகவல்..!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததற்கான முக்கியக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தாலும், கடந்த சில தினங்கள் வார இறுதி விடுமுறை நாட்களாக இருந்ததால், நீதிமன்ற உத்தரவின் அதிகாரப்பூர்வ நகல் இன்னும் செந்தில் பாலாஜியின் தரப்பிற்குக் கிடைக்கப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, காவல் நிலையத்தில் ஆஜராவதற்கான நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நீதிமன்றத் தரப்பில் இருந்து முன்ஜாமீன் உத்தரவு நகல் கைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த நகல் கிடைத்தவுடன், நீதிமன்ற நிபந்தனைகளின்படி நாளை (செவ்வாய்க்கிழமை) செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது முதல் கையொப்பத்தை இடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
