CRIME
“இப்படிப்பட்ட அரக்கிகளை பார்த்ததே இல்லை…” ஆட்டிசம் பாதித்த மகனை உணவே கொடுக்காமல் பசியால் சாகடித்த கொடூர தாய், பாட்டி… அண்டை வீட்டார் கொந்தளிப்பு..!!
நியூயார்க்கில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அடோனிஸ் ஜார்விஸ் (16) என்ற சிறுவனை அவனது தாயும் பாட்டியும் உணவளிக்காமல் பட்டினி போட்டே கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உணவு தராமல் அடைத்து வைக்கப்பட்டதால், அந்தச் சிறுவன் கடுமையான பசியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக அவனது தாய் மற்றும் பாட்டி ஆகிய இருவரையும் நியூயார்க் காவல்துறை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த சிறுவனின் உடல் முழுவதும் பசியின் கொடுமையால் வீக்கம் ஏற்பட்டிருந்தது உடற்கூறாய்வில் தெரியவந்தது. மேலும், இவர்களின் கொடூர புத்திக்கு இந்த ஒரு சிறுவன் மட்டும் இரையாகவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்தச் சிறுவனின் உடன்பிறந்த சகோதரனும் ஏற்கனவே இதேபோன்று இவர்களால் பட்டினி போடப்பட்டு, கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினரிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்டிசம் பாதித்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனுக்கு அவனது குடும்பத்தினரே இப்படி ஒரு கொடுமையை இழைத்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்றும், தங்கள் வாழ்நாளில் இப்படிப்பட்ட கொடூரமான பெண்களைக் கண்டதே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
