LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! அதிமுகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்..? ஸ்டாலினுக்கு செம ஷாக்..!!
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மத்திய மாவட்ட திமுக கலைக்கப்பட்டு, அத்தொகுதிகள் முறையே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த தோப்பு வெங்கடாசலம், தற்போது கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெருந்துறை தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் வரவுள்ள சூழலில், இன்னும் ஒரு வாரத்தில் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இவரை மீண்டும் அதிமுகவில் இணைத்து பெருந்துறை இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளராக நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர் தவெக கட்சியிலும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
