ஐயோ கடவுளே..! “கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு காட்டுக்குள்…” கணவன் கண்முன்னே 26 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே..! “கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு காட்டுக்குள்…” கணவன் கண்முன்னே 26 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தின் காதேர் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சிலர் திடீரென வழிமறித்துள்ளனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய அந்த நபர்கள், அவர்களிடமிருந்த மொபைல், பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டனர். பின்னர், அந்தப் பெண்ணை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு, வலுக்கட்டாயமாக அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.

தடுக்க வந்த கணவரைத் தீவிரமாகத் தாக்கி நிலைகுலையச் செய்த கொள்ளையர்கள், அவரின் கண்முன்னேயே 26 வயதான அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அந்தப் பெண் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு, சாலையில் விழுந்துகிடந்த வாகனத்தைப் பார்த்து நின்ற வழிப்போக்கர் ஒருவர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். அருகில் இருந்த ரோந்து வாகனம் விரைவாகச் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கண்ட கொள்ளையர்கள், தங்களது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட தம்பதி அளித்த புகாரின் பேரில் தர்னாவதா காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பப்லூ பஞ்சாரா, சோட்டு பஞ்சாரா, சர்தார் பஞ்சாரா, மகேந்திர பஞ்சாரா மற்றும் தினேஷ் பஞ்சாரா ஆகிய 5 பேரை போலிஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in