LATEST NEWS
“ஆபாச வீடியோ இருக்கு… பணம் குடுங்க..!” மிரட்டல் கும்பலுக்கு தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அதிரடி வார்னிங்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, அண்மைக்காலத்தில் பல்வேறு சர்ச்சை மற்றும் விமர்சனங்களில் சிக்கி வருகிறார். விருதுநகர் அரசு நிகழ்ச்சியில் பெயர்ப் பலகை சர்ச்சை, மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதம், தவெக நிர்வாகியை மிரட்டியதாக வெளியான ஆடியோ பரவல் மற்றும் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்ட கல்வி/வருமான விவரங்கள் தொடர்பான விமர்சனங்கள் எனத் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அவர் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தனது பெயரைப் பயன்படுத்திச் சிலர் மிரட்டுவதாகவும், ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு சிலர் பணம்கேட்டு மிரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறையில் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதா அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
