LATEST NEWS
“திக்.. திக்.. நொடிகள்..! காட்டிற்குள் சன்ரூஃப் சவாரி.. அடுத்த நொடியே பாய்ந்து வந்த மரணம்..! வைரலாகும் பகீர் வீடியோ..!!”
காட்டின் நடுவே மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காரின் ‘சன்ரூஃப்’ கதவைத் திறந்து, அதில் இருந்து தனது உடலின் மேல் பகுதியை வெளியே நீட்டிக்கொண்டு நீல நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டிருக்கிறார். அவர் எவ்வித பயமுமின்றி இயற்கை அழகைப் படம் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு நேரவிருக்கும் ஆபத்து குறித்து சிறிதும் தெரிந்திருக்கவில்லை.
திடீரென்று சாலையின் ஓரத்தில் இருந்த அடர்ந்த புதர்களில் லேசான அசைவு ஏற்படுகிறது. காரில் உள்ளவர்கள் எதையும் உணர்வதற்குள், மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ஒரு சிறுத்தை நேரடியாக காரின் பானட் மீது குதித்து, ஒரே பாய்சலில் சன்ரூஃப் வழியே வெளியே நின்றுகொண்டிருந்த இளைஞரின் தலையையும் கழுத்தையும் தாக்கியது. இந்த எதிர்பாராத தாக்குதலால் காரில் இருந்தவர்களிடையே கடும் பீதியும் குழப்பமும் நிலவியது. அதன்பின்னர் அந்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது என்ற முழு விவரம் தெளிவடையவில்லை என்றாலும், இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி காடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. சிறந்த புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் ஆசையில் சனரூஃப் வழியே வெளியே தலைநீட்டுவது மற்றும் வனவிலங்குகளை நெருங்க முயல்வது போன்ற சிறிய தவறுகள் உயிரக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலர், வனப்பகுதிகளில் இதுபோன்ற அசட்டுத்தனமான மற்றும் பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
