அட..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே…தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால்… உடலில் என்ன ஆகும் தெரியுமா….? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே…தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால்… உடலில் என்ன ஆகும் தெரியுமா….? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Published

on

நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். பொதுவாக, வாழைப்பழம் என்பது பசியைப் போக்குவதற்காக நிறைய நபர்கள் சாப்பிடும் ஒரு உணவாகவே உள்ளது. காலை நேரங்களில் உணவு எடுத்துக்கொள்ள நேரமில்லாத காரணத்தினால் வாழைப்பழம் சாப்பிட்டு அவர்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டு போவதை நாம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல் வாழைப்பழம் வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கக்கூடிய பழமாகவும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை வேண்டாம் என்று சொல்வதில்லை. மேலும், வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.

United States Department of Agriculture கூற்றின்படி, 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் 89 கலோரிகள், 0.33 கிராம் கொழுப்பு, 1 மில்லிகிராம் சோடியம், 22.80 கிராம் கார்போஹைட்ரேட், 2.60 கிராம் நார்ச்சத்து, 1.09 கிராம் புரதம் மற்றும் 358 மில்லிகிராம் பொட்டாசியம் ஆகியவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement

இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பதற்கு உதவுகிறது. மேலும், இதிலுள்ள இயற்கைச் சர்க்கரை கார்போஹைட்ரேட் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. அதனால் காலை உணவாகவும் உடற்பயிற்சிக்கு முன்னரோ அல்லது பின்னரோ சிற்றுண்டியாகச் சாப்பிடுவதற்கும் இது சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, செரோடோனின் எனப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி மனநிலையைச் சீராக வைக்கிறது. ஒருவர் தொடர்ந்து 45 நாட்கள் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரும்போது, அதன் ஊட்டச்சத்துக்கள் சீரான ரத்த அழுத்தத்திற்கும், மேம்பட்ட செரிமானத்திற்கும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றன. இருப்பினும், ஏற்கனவே அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்பவர்கள் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள் சேர்வதால் எடை அதிகரிக்கக்கூடும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in