LATEST NEWS
“இவன்லாம் ஒரு மகனா..?” 75 வயசு பெத்த தாயை நடுரோட்டில் முடியைப் பிடிச்சு இழுத்து அடிச்ச கொடுமை..! ஜபல்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிசிடிவி காணொளி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் ரஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் விஹார் காலனியில், 75 வயது மூதாட்டியான மித்ரா விஸ்வகர்மா என்பவரை, அவரது மகன் ராஜு விஸ்வகர்மா வீட்டின் வெளியே நடுரோட்டில் முடியைப் பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்துள்ளது. காலை 9:19 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி பயத்துடன் திரும்பி ஓட முயன்றபோது, குடிபோதையில் இருந்த அவரது மகன் அவரைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவியதோடு, அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான சோமேஷ் சோனி மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், ராஜு அடிக்கடி மது அருந்துவிட்டு வந்து தாயை அடிப்பதாகவும், பிற மக்களைத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின்போதும் த தடுக்க முயன்ற அக்கம்பக்கத்தினரை அவர் மிரட்டியுள்ளார். இதற்கு முன்பும் ரஞ்சி காவல் நிலையத்தில் இவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடி மருத்துவப் பரிசோதனை செய்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவரிடம் உள்ள சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளதாக ரஞ்சி காவல் நிலைய பொறுப்பாளர் உமேஷ் கோல்ஹானி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்ட ராஜு விஸ்வகர்மா மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
