LATEST NEWS
டாக்டர் படிப்புக்கு வந்த இடத்தில் இப்படியா..? கோடிகளைச் செலவழிச்ச பெற்றோர் வயித்துல அடிச்சுட்டாங்களே… ஆண் நண்பர்களுடன் சாலையில் தள்ளாடிய மாணவிகள் … கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனையில் நடைபெற்ற ‘பைரெக்ஸியா’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவ மாணவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். அங்கு வந்திருந்த சில மாணவிகள் கடுமையான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் சாலையில் தங்களது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பெரும் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதுடன், தங்களை சுயகட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளக் கூட முடியாமல் தடுமாறிய நிலையின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது மகளை ஒரு சிறந்த மருத்துவராக மாற்ற வேண்டும் என்பதற்காக பல வருட கடின உழைப்பையும், லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் பணத்தையும் செலவழித்த பெற்றோர்களுக்கு, இத்தகைய காட்சியைப் பார்ப்பது மனதை உலுக்கும் ஒன்றாகவே அமையும். ஏனெனில், அவர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை இது வெறும் ஒரு மருத்துவப் பட்டம் மட்டுமல்ல; அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான கனவு மற்றும் தியாகத்தின் அடையாளம் ஆகும்.
https://twitter.com/MandeepRajBhar9/status/2086413614509064622/video/2
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மருத்துவத் துறை போன்ற புனிதமான படிப்பைப் படிக்கும் மாணவர்கள், பொது இடங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் மிதமிஞ்சிய நடத்தைகளில் ஈடுபடுவது அவர்களின் எதிர்காலத்திற்கும், அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் குடும்பத்தின் தியாகத்திற்கும் செய்யும் துரோகம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
