CRIME
மகள் காதலன்… தாய்க்கு கள்ளக்காதலன்… டீயில் மயக்க மருந்து கலந்து அண்ணனைக் கொன்ற அண்ணி… மொபைல் போன் அம்பலப்படுத்திய உண்மை..!!
மதுராவைச் சேர்ந்த மனோஜ் சோனி என்பவர், தன் மகள் காதலனுடன் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, அவளை வீட்டிற்கு அழைத்து வந்து கடுமையாகத் தாக்கியதுடன் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தார். ஆனால், அதே நேரத்தில் மனோஜின் மனைவி நைனா சோனி என்பவருக்கு, தன் மகளின் காதலனுடைய நண்பருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்குத் தெரியாமல் நைனா அவனுடன் ரகசியமாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
ரகசியமாகச் சந்திப்பதில் திருப்தியடையாத தாயும் மகளும், மனோஜைக் கொன்று வழியில் இருந்து அகற்றத் திட்டம் தீட்டினர். அதன்படி, மனைவி நைனா கணவனின் டீயில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து, மகளின் காதலனும் தாயின் கள்ளக்காதலனும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த மனோஜை ஆட்டுக்கல்லாலும் கற்களாலும் தாக்கிப் படுகாயப்படுத்தினர். மனோஜ் சுயநினைவு திரும்பிய நிலையில், அவர் கண்முன்னேயே தாயும் மகளும் தங்கள் காதலர்களுடன் தவறாக நடந்து கொண்டு, இறுதியில் மனோஜைக் கொடூரமாகக் கொலை செய்து உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.
கொலைக்குப் பின் 10 நாட்களாக மனோஜ் உறவினர்களிடம் பேசாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அதற்கு நைனா, கடன் தொல்லையால் தன் கணவர் டெல்லிக்கு வேலைக்குச் சென்றுள்ளதாகக் கூறி சமாளித்துள்ளார். எனினும், அண்ணியின் மீது சந்தேகம் கொண்ட மனோஜின் சகோதரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் தாய் மற்றும் மகளின் செல்போன்களைக் கண்காணிப்பில் (Surveillance) வைத்தபோது, காதலர்களுடன் அவர்கள் பேசிய உரையாடல்கள் மூலம் இந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
