தம்பி கொஞ்சம் தள்ளிப்போ… பாட்டு முடியட்டும்… செல்போனை உற்றுப் பார்த்த நல்லபாம்பு.. சோஷியல் மீடியாவை கலக்கும் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தம்பி கொஞ்சம் தள்ளிப்போ… பாட்டு முடியட்டும்… செல்போனை உற்றுப் பார்த்த நல்லபாம்பு.. சோஷியல் மீடியாவை கலக்கும் வீடியோ..!

Published

on

பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி நல்லபாம்புகளில் ஒன்று, சிறுவன் ஒருவன் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென வெளியே வந்து செல்போன் திரையை வேடிக்கை பார்க்கத் தொடங்கிய சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெட்டியின் அருகே அமர்ந்து சிறுவன் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த நல்லபாம்பு அவன் கையில் இருந்த செல்போன் திரையை உற்றுப் பார்க்கத் தொடங்கியது.

பாம்பு தன் அருகில் இருப்பதை உணர்ந்த அந்தச் சிறுவன், அச்சத்தில் உடனடியாக அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றான். அறையில் இருந்த மற்றொரு சிறுவன் இந்த முழு சம்பவத்தையும் தனது கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்தார். சிறுவன் விலகிச் சென்ற பிறகும், அந்த நல்லபாம்பு தரையில் வைக்கப்பட்ருந்த செல்போன் திரையில் ஓடிக்கொண்டிருந்த பாடலைச் சில நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தது.

Advertisement

திரையில் ஓடிய பாடல் முடிவடைந்ததும், அந்தப் நல்லபாம்பு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து, தான் இருந்த பெட்டி போன்ற கொள்கலனுக்குள்ளேயே மீண்டும் சென்றுவிட்டது. விலங்கினங்களின் இத்தகைய விசித்திரமான நடத்தையைக் காட்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பயனர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in