CINEMA
நாளை கொடி பறக்கும்…. இனி தமிழகம் சிறக்கும்…. தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கை….!!
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். விஜய் அடுத்த படம் நடிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
இருப்பினும் விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றி வைத்திருப்பதாகவும் மற்றும் கட்சி பாடலை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) August 21, 2024