CINEMA
ஜனநாயகன் பட விவகாரத்தில் களமிறங்கிய சூப்பர் ஸ்டார்….! “அந்த தப்ப செஞ்சவங்கள சும்மா விடாதீங்க”… அரசுக்கு கோரிக்கை…!!
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போய் தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளியாகவிருந்தது. இந்நிலையில், படம் முழுவதுமாக இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், காட்சிகளைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளதோடு சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.
திரைப்படக் குழுவினருக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறியுள்ள அவர், திரை அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளைக் கண்டறிந்து அரசு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் பலரது கடின உழைப்பில் உருவான படம் இவ்வாறு திருட்டுத்தனமாக வெளியாவது தடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் திரையுலகின் கோரிக்கையாக உள்ளது.
