CINEMA
கையெழுத்து போட்டே விடிஞ்சிரும்…! விஜய்யின் ‘டிஜிட்டல்’ வாக்குறுதிகளைக் கிண்டல் செய்த சேரன்… ரசிகர்கள் கொதிப்பு…!!
கன்னியாகுமரி தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய், பொதுமக்கள் நேரடியாக ஆட்சியில் பங்கேற்கும் வகையில் ‘மை வெற்றி தமிழ்நாடு’ என்ற இணையதளத் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிரடி வாக்குறுதி அளித்தார். இத்திட்டத்தின் மூலம் 5 லட்சம் பேர் கையொப்பமிடும் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் அரசின் நிதிச் செலவுகளைக் கண்காணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் தளம் வழியாக மக்கள் நேரடியாகச் சட்டமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்கும் ‘மக்கள் அரங்கம்’ திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார்.
விஜய்யின் இந்த அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ள இயக்குநர் சேரன், “விஜய்க்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பணி என்னவென்றே தெரியவில்லை” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கோரிக்கைக்கும் கையெழுத்து வேட்டையாடிக்கொண்டே இருந்தால் காலம்தான் வீணாகும் என விமர்சித்த அவர், விஜய்யின் இந்தப் பேச்சு மற்ற அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் என்றும் குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ள இந்த விமர்சனம், தற்போது தவெக ஆதரவாளர்களுக்கும் சேரனுக்கும் இடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
