CINEMA
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் வேட்டையன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.