CINEMA
27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…. “வேட்டையன்” படத்தின் பாடலால் குஷியான ரசிகர்கள்…!!
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது .படத்தின் முதல் பாடலான மனசிலாயோ என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பாடலின் கிளிம்பஸ் வீடியோ நேற்று வெளியானது. அதில் இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் ஆன மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார் . 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவருடைய குரலை AI தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளார்கள்.