CINEMA
“வேட்டையன்” படத்திற்கு காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி… குஷியில் ரசிகர்கள்…!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 5 காட்சிகள் வீதம் இரவு காட்சிகள் இரவு 2 மணி வரை திரையிடலாம் என்று தெரிவித்துள்ளது.