CINEMA
நான் பொறுமையான ஆளே கிடையாது….. தன்னுடைய குணத்தை பற்றி தினேஷ் ஓபன் டாக்…!!

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பெரிய அளவில் ப்ரோமோஷனல் எதுவுமே இல்லாமல் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், விஜய் சஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் குறைவான ஸ்கிரீன்களுடன் வெளியான நிலையிலும் ரசிகர்களின் பெருமித்த ஆதரவால் மெயின் ஸ்கிரீம் திரைப்படமாக திரையரங்கில் மாறி உள்ளது.
கிரிக்கெட் சார்ந்த உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர்கள் பலரும் பாராட்டி உள்ளார்கள். படம் வெளியான மூன்று நாட்களில் 3.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வெளியான “நீ பொட்டு வெச்ச தங்க குடம்” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் பேட்டி பேசிய நடிகர் தினேஷ், நான் பொறுமையான ஆளே கிடையாது. எப்பொழுதும் துருதுருவென இருப்பேன் என்று கூறியுள்ளார்.