CINEMA
படத்தில் “கெத்து” கேரக்டர் இல்லாவிட்டால்…. உண்மையை வெளிப்படையாக பேசிய ஹரீஷ் கல்யாண்…!!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஹரீஷ் கல்யாண், படத்தில் கெத்து கேரக்டர் இல்லாவிட்டால் அன்பு என்ற கேரக்டர் இல்லை. அதாவது தினேஷ் அண்ணன் இல்லையென்றால் இந்த அளவிற்கு என்னுடைய கேரக்டர் வெளிவந்திருக்காது என்று வெளிப்படையாக பேசியுள்ளர்.