CINEMA
“குட் லக் தல” நான் உங்களுக்கு ஆலோசராக இருந்தால் பெருமையாக இருக்கும்… கார் ரேஸர் நரேன் வாழ்த்து…!!!

European GT4 championship 2025 கார் பந்தய தொடரில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ரேசிங்கிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதால் இவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் கார் ரேசர் நரேன் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், ரேசிங்கில் கம்பேக் கொடுப்பதற்காக நடிகர் அஜித் கடினமாக உழைத்து வருவதாக கேள்விப்பட்டேன்.
அவர் ஒரு லெஜன்ட். சிறந்த நடிகர், சிறந்த ரேஸரும் கூட. அவருடைய திறமைகளுக்கு எல்லையே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர். “குட் லக் தல” நான் உங்களுக்கு ஆலோசராக இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என்று கார் ரேசர் நரேன் கார்த்திகேயன் பதிவிட்டு நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.