CINEMA
“நீயும் நானும் சேர்ந்தே வாழும் நேரமே” அஜித் ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஜோடியின் சமீபத்திய வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டும் வருகிறார். இதுகுறித்த விடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்தவகையில் தற்போது இந்த ஜோடியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.