அம்மாவுக்கு கேன்சர்…. அங்கிருந்து படிக்காமல் திரும்பி வந்தேன்…. பழைய நினைவுகளை பகிர்ந்து அரவிந்த்சாமி…!! - cinefeeds
Connect with us

CINEMA

அம்மாவுக்கு கேன்சர்…. அங்கிருந்து படிக்காமல் திரும்பி வந்தேன்…. பழைய நினைவுகளை பகிர்ந்து அரவிந்த்சாமி…!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இடையில் சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து மாஸ் என்ட்ரி கொடுத்தார்.அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது இவரின் நடிப்பில் நரகாசுரன், கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

Advertisement

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அரவிந்த்சாமி, காலேஜ் படிக்க சென்ற போது அம்மாவிற்கு கேன்சர் என்று செய்தி வந்ததால் படிக்காமல் திரும்பி வந்துவிட்டேன். அம்மா என்றால் எனக்கு உயிர் என்று பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement