“உன்னை உள்ளே பிடித்துத் தள்ளிவிடுவேன்” கர்ப்பிணி மனைவியைப் பார்க்கத் தவித்த கணவன்… 500 ரூபாய் லஞ்சத்துக்காக நேர்ந்த அநியாயம்.. ரயில்வே ஊழியர் செயலால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்னை உள்ளே பிடித்துத் தள்ளிவிடுவேன்” கர்ப்பிணி மனைவியைப் பார்க்கத் தவித்த கணவன்… 500 ரூபாய் லஞ்சத்துக்காக நேர்ந்த அநியாயம்.. ரயில்வே ஊழியர் செயலால் பரபரப்பு..!!

Published

on

ரயில்வே தட்கல் டிக்கெட் கவுண்டரில் கர்ப்பிணி மனைவியைக் காண அவசரமாக சொந்த ஊர் செல்ல முயன்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த அநீதி இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிசையில் முத ஆளாக நின்றிருந்தும், அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் லஞ்சமாக 500 ரூபாய் பெற்றுக்கொண்டு பிறருக்கு முன்னுரிமை வழங்கி டிக்கெட்டுகளை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு நாட்களாக அலைந்து திரிந்து வரிசையில் நின்ற அந்த நபருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய டிக்கெட் மறுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தட்டிக்கேட்ட அந்த நபருடன் கவுண்டரில் இருந்த ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிக மோசமாக நடத்தியுள்ளார். மேலும், உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்தபோது, அவரது செல்போனைப் பிடுங்க முயன்றதோடு, “உன்னை உள்ளே பிடித்துத் தள்ளிவிடுவேன்” எனப் பெண் ஊழியர் மிரட்டலும் விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, டிக்கெட் வழங்காமல் தவிர்ப்பதற்காக ‘ஓடிபி (OTP) தவறாக இருக்கிறது’ எனச் போலி சாக்குபோக்குகளையும் கூறியுள்ளனர்.

Advertisement

https://twitter.com/MandeepRajBhar9/status/2086467666529652811/video/2

கர்ப்பிணி மனைவியின் அவசரத் தேவைகளுக்காக ஊருக்குச் செல்லத் தவித்த ஒரு சாதாரணப் பயணியின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நடந்த இந்த அநியாயம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த லஞ்ச ஊழல் மற்றும் ஊழியர்களின் அதிகாரம் துஷ்பிரயோகம் குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in